பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் புகாரளித்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் முறையான விசாரணை நடத்தாமல் என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
AI மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கருப்பு முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார்.