தமிழக செய்திகள்

TN Elections 2026 | என் மகன் பிரசாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை - கருணாஸ்

வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலைத் தொடர்ந்து மே 04-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்தக் கட்சியின் சார்பில் நடிகர் கருணாஸ் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் தனது மகன் கென் பிரசாரம் செய்து தான் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய கருணாஸ், "என் மகன் கென்-க்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அவர் பிரசாரம் செய்து நான் வெற்றி பெற வேம்டிய அவசியம் இல்லை. நான் ஏற்றுக் கொண்ட மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்கள், தற்போது அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை கூறினாலே போதும். அவர் அறிவித்துள்ள இல்லத்தரசி திட்டம் ஒன்றே என்னை சிவகங்கையில் வெற்றி பெற வைக்கும்," என்றார்.

SCROLL FOR NEXT