தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் 101 - கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்ற நாள்

"தமிழர்களே தமிழர்களே நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால் தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன்ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்...

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக தி.மு.க. எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. 

அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடையில் பேசிய,

"தமிழர்களே தமிழர்களே

நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால்

தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன் அறிஞர் அண்ணா அவர்களால்

நான் வலுப்பெற்றவன் என்னுடைய கழக கண்மணிகளால்.."

"ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்... அவன் உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குளே வைத்தானா? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன களிமண்ணா... சுண்ணாம்பா..."

"இது உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல... உயிரினும் மேலான உங்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புக்கள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள்...," உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடல்கள் கோர்வையாக இணைக்கப்பட்டு உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.