தமிழக செய்திகள்

கர்நாடக அமைச்சரின் பேச்சை ஏற்க முடியாது..!– காவிரி விவகாரத்தில் கனிமொழி எம்பி காட்டம்

தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டைப் பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா அமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது என்றும்

குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது எனவும் திமுக எம்.பி கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜூன் மாதம் 9.91 டி.எம்.சியும், ஜூலை மாதத்தில் 32 டி.எம்.சியும் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா நீர்பாசனத்துறை அமைச்சர் கூறியிருப்பதை ஏற்கமுடியாது.

குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், தவெக அரசும், அவர்களுடன் அமைச்சரையில் பங்குக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டைப் பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.