தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக காவல் அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ரோகிணியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அதிமுக-வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு (செப்.5) 9 மணி அளவில் வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களது கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
இதைபார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது.
இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதிராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.