கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தவெக எம்எல்ஏவை காப்பாற்ற முயன்றால் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புவோம் என்று கனிமொழி எச்சரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அருள் விக்னேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக எம்எல்ஏவை காப்பாற்ற முயன்றால் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புவோம் என்று கனிமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தவறே நடைபெறவில்லை என கூறி வந்தனர் அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன்.
* உயர்நீதிமன்றம் தலையிடும் வரை தவெக எம்எல்ஏவை காப்பாற்ற முயன்றது ஏன்?
* தமிழ்நாட்டில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
* ஒரு கலெக்டரால் கூட புகார் அளிக்க முடியாத நிலை தமிழ்நாட்டில் உள்ளது.
* ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகார் சென்றுள்ளது.
* பெண்களின் பாதுகாப்பு பற்றி பேச தவெகவிற்கு என்ன தகுதி அருகதை உள்ளது?
* சொந்தக் கட்சி எம்எல்ஏவை காப்பாற்றுவதற்காக பெண்ணை இழிவுபடுத்தி உள்ளனர். இவர்கள் எந்த அடிப்படையில் பெண்களை பாதுகாப்பதாக கூறி வருகிறார்கள்?
* பெண்களை காப்பற்றவே ஆட்சிக்கு வந்துள்ளேன் எனக்கூறிய முதலமைச்சர் இப்போது என்ன சொல்லப்போகிறார்.
* தவெக எம்எல்ஏவை காப்பாற்ற முயன்றால் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புவோம் என்று கூறியுள்ளார்.