தமிழக செய்திகள்

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்க்கும் தவெக அரசு..! மதுரை மாணவன் கொலை விவகாரத்தில் திமுக எம்.பி கனிமொழி கண்டனம்

தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.

"சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?

மதுரை அருகே காணாமல் போன 11ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களுடன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து சமரசமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.

மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT