தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விழுப்புரம் - மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களாக, நாள்தோறும் இதுபோன்று வரும் செய்திகளால் தமிழ்நாட்டிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை ஒப்புக்கொண்டு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.