தமிழக செய்திகள்

வெற்றி விலை உயர்வுத் திட்டம் CM BRO-வின் அதிரடி OFFER - கனிமொழி விமர்சனம்

பொன்னி உள்ளிட்ட உயர் ரக அரிசி விலை மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது.

ரூ.52-க்கு விற்கப்பட்ட கிலோ அரிசியின் விலை தற்போது ரூ.75-க்கு விற்கப்படுவதாக கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஓரிரு மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது நடுத்தர குடும்பங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னி உள்ளிட்ட உயர் ரக அரிசி விலை மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது. 26 கிலோ கொண்ட பாஸ்மதி அரிசி பை ரூ.3,300-ல் இருந்து ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அரிசி விலை உயர்வை சுட்டிக்காட்டி திமுக எம்பி கனிமொழி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வெற்றி விலை உயர்வுத் திட்டம்

CM BRO-வின் அதிரடி OFFER

புழுங்கல் பொன்னி அரிசி ரூ.75 என்று பதிவிட்டுள்ளார்.

ரூ.52-க்கு விற்கப்பட்ட கிலோ அரிசியின் விலை தற்போது ரூ.75-க்கு விற்கப்படுவதாக கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT