தவெக அரசு எதிர்க்கட்சியினருக்கு ஜெட் வேகத்தில் நடவடிக்கை எடுக்கும் நிலையில், தங்களின் உறுப்பினர்களுக்கு ஆமை வேகத்தில் செயல்படுவதாக கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.
தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய விஜய் தலைமையிலான தவெக அரசு என்று விமர்சித்துள்ளார்.