முதலமைச்சர் கவனிக்கும் காவல் துறையில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்கோ தடுத்து நிறுத்துவதற்கோ எந்த நடவடிக்கையும் இல்லை என்று கனிமொழி கூறினார்.
சென்னையில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகாவை இரவு உடையில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
* அதிகாலையில் உடைமாற்ற கூட அனுமதிக்காமல் கைது செய்ய அப்படி என்ன அவசரம்?
* எதிர்க்கட்சி பெண் ஆளுமைகளை சமூக வலைதளங்களில் தவெகவினர் ஆபாசமாக பேசுகின்றனர்.
* நயினார் நாகேந்திரனை கைது செய்ய தவெக அரசுக்கு தைரியம் இல்லையா?
* திமுக கூட்டத்தில் அவதூறாக பேசிய பெண் நிர்வாகியை அங்கேயே கண்டித்தேன். ஆனால், நான் பேசாமல் அமர்ந்திருந்ததாக அமைச்சர் பொய்யாக பதிவிடுகிறார்.
* தவெக ஆட்சிக்கு வந்தபிறகு தான் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
* முதலமைச்சர் கவனிக்கும் காவல் துறையில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்கோ தடுத்து நிறுத்துவதற்கோ எந்த நடவடிக்கையும் இல்லை.
* சட்டசபையில் கேட்டால் பஞ்ச் டயலாக் பேசி விட்டு, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் முதலமைச்சர் கிளம்பி செல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.