தமிழக செய்திகள்

பூந்தமல்லி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வேதனை அளிக்கிறது - கனிமொழி

அதிமுகவிலுள்ள புதுப்புது சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதில் தான் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பூந்தமல்லி அருகே சமூகவிரோதியால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வேதனை அளிக்கிறது.

குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஒவ்வொரு நாளும் குதிரை பேரம் நடத்தி, அதிமுகவிலுள்ள புதுப்புது சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதில் தான் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.