தமிழக செய்திகள்

பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மரியாதை

சென்னை பல்லவன் இல்லம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் முதலமைச்சரும், ‘கல்வி கண் திறந்தவர்’ என்று அழைக்கப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விருதுநகரில் பிறந்தார். ஏழை குழந்தைகளின் கல்விக்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இவரது பிறந்தநாள், தமிழ்நாட்டில் 'கல்வி வளர்ச்சி நாளாக' கொண்டாடப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.

சென்னை பல்லவன் இல்லம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கர்மவீரர் காமராஜரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்டோரும் காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.