சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள் இன்று.
இதனையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை; தேசியச் சிந்தனையோடு தாய்மொழிப் பற்றும் கொண்டிருந்தவர்; கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுக்க வைத்தாலும், கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல்.
தியாகத்தின் உச்சமாகத் திகழ்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் வீர வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை; தேசியச் சிந்தனையோடு தாய்மொழிப் பற்றும் கொண்டிருந்தவர்; கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுக்க வைத்தாலும், கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல். தியாகத்தின் உச்சமாகத்…