தமிழக செய்திகள்

TN Election 2026 | கமல் ஏப்ரல் 17-ந்தேதி முதல் தேர்தல் பரப்புரை

கமல் ஹாசன் 20 தொகுதிகளில் நான்கு நாட்கள் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் உள்ளது. ஆனால், சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கமல் அறிவித்தார். திமுக கூட்டணியில் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் சின்னம் ஆகியவை கேட்டபடி அமையாததால் இந்த முடிவை எடுத்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார். ஆனால் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் என்றார்.

அந்த வகையில் ஏப்ரல் 17-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை 20 தொகுதிகளில் நான்கு நாட்கள் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.