நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகைள தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த கமல்ஹாசனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், கூறியிப்பதாவது:-
இன்று பிறந்த நாள் காணும் மக்கள் நீதி மய்யம் தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் கமல்ஹாசன் சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.