தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு

சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து 24 பேரை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் பலியானார்.

Maalaimalar

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷ சமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதில் 67 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். கருணாபுரத்தை சேர்ந்த மோகன் (50) மட்டும் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலியானர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது.

கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து 24 பேரை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.