சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் 
தமிழக செய்திகள்

த.வெ.க. தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது- கே.பாலகிருஷ்ணன்

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை என்று சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனைக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

அதன்படி, முதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு பேசிய சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், த.வெ.க.வின் கூட்டணி கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது என தெரிவித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், த.வெ.க. கூட்டணியில் இல்லை, அதனால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். கடந்த மாத கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இப்போது எப்படி செல்வோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை என்றார்.

இதனால் நாளை நடைபெறும் கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே நாளை நடைபெறும் த.வெ.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்குமா? பங்கேற்காதா? என்பது குறித்து தெரியவரும்.

முன்னதாக த.வெ.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்பதில்லை என அறிவித்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT