தமிழ்நாடு செய்திகள்

சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கு: திமுக எம்.எல்.ஏ.-வின் மகன், மருமகளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

வீட்டில் வேலை செய்தபோது கொடுமைப்படுத்தியதாக சிறுமி புகார் அளித்திருந்தார்.எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாலை மலர்

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ இ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் அவர்களுடைய வீட்டில் வேலைபார்த்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அந்த சிறுமி புகார் அளித்திருந்தார்.

இதனால் மதிவாணன்- மெர்லினா தம்பதி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனால் மதிவாணன் தம்பதி தலைமறைவானது. மூன்று தனிப்படைகள் அமைத்து அவர்களை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது வருகிற 9-ந்தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் அவர்கள் புழல் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்கள்.