தமிழக செய்திகள்

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 82 மாவட்ட முதன்மை நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 82 மாவட்ட முதன்மை நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணி ஆணை குழு செயலாளர் ஆர். தோத்திர மேரி, சேலம் மாவட்ட வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், சென்னை 10-வது கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும்,

சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணி ஆணை குழு செயலாளராகவும், சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ் .சுபா தேவி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும்,

திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை நீதிபதி மதுசூதனன், சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஈ.சசிகலாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதில் செங்கல்பட்டு வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜாதா குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.