தமிழக செய்திகள்

ஜோலார்பேட்டை-பெங்களூரு இடையிலான பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து

பராமரிப்பு பணி காரணமாக பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஜோலார்பேட்டையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவிற்கு செல்லும் பயணிகள் ரெயில், பகுதிநேரமாக ஜோலார்பேட்டை-சோமநாயக்கன்பட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.