தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் காரில் அழைத்துச் செல்லப்பட்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் என்ற இருவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பால முருகன், தூத்துக்குடி மேற்கு மாவட்ட த.வெ.க இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். ஜெயபால், ராமநாதபுரம் மாவட்ட த.வெ.க நிர்வாகியாக உள்ளார்.
இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.