தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நேற்று மாலையுடன் பரப்புரை முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு மையத்திற்கு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் கம்பெனிகள், நிறுவனங்கள் வாக்காளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேர்தலையொட்டி சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் நகைக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் நகைக்கடை பணியாளர்கள் அனைவரும் 100 விழுக்காடு வாக்களிப்பதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.