தமிழக செய்திகள்

செங்கோட்டையனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது- டிடிவி தினகரன்

அதிமுகவையும், தொண்டர்களையும் தவெக அழிக்க பார்க்கிறது என்றார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவை அழிக்க நினைக்கும் விஜய்க்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தருவது எந்த வகையில் நியாயம்?

ஊழல் கட்சி என்று கூறிவிட்டு அதிமுகவிடம் ஆதரவு கேட்பது ஏன்?

வேலுமணி அணியினர் அவசரப்பட வேண்டாம், அது உங்களையே பாதிக்கும்.

அதிமுகவையும், தொண்டர்களையும் தவெக அழிக்க பார்க்கிறது.

தொண்டர்கள் பெயரை சொல்லி அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு ஆதரவளிப்பதா?

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட காமராஜ் தவெகவில் இணைந்தால், விளைவுகள் விபரீதமாகும்.

இபிஎஸ் நியமிக்கும் கொறடாவின் உத்தரவுதான் செல்லும். தவெகவிற்கு ஆதரவு அளிப்பவர்களின் பதவி பறிபோகும்.

அதிமுகவை அழிக்க துணைபோகும் செங்கோட்டையனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT