தமிழக செய்திகள்

ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி வழக்கு: உயர்நீதிமன்றம் அதரடி உத்தரவு

2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரா வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி பாக்கி தொடர்பாக அனுப்பிய, நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.