தமிழக செய்திகள்

சி.ஜோசப் விஜய் எனும் நான்... நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்?

வருகிற 7-ந்தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை காலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ள விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

இதனை தொடர்ந்து வருகிற 7-ந்தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை 3 நாட்களுக்கு சென்னையிலேயே இருக்குமாறு த.வெ.க. தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.