தமிழக செய்திகள்

திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்கிறாரா விஜய்?

பெரம்பூரில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 454 வாக்குகள் பெற்று 53 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் போட்டியிட்டார்.

பெரம்பூரில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 454 வாக்குகள் பெற்று 53 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கு தொகுதியில் 91 ஆயிரத்து 381 வாக்குகளை பெற்று சுமார் 27 ஆயிரத்து 416 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. தலைவர் அபார வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் விஜய் உள்ளார் இதனால் அவர் பெரம்பூர், திருச்சி கிழக்கில் எந்த தொகுதியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பெரும்பாலும் திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்வார் என்றும் சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக விஜய் தொடர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அங்கு நடைபெற உள்ள தேர்தலில் லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.