தமிழக செய்திகள்

ஆணவத்தில் கொக்கரித்த திமுகவின் முகத்திரை கிழிகிறதா? - தவெக ஐடி விங்

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணியாற்றினார்.

தமிழகத்தின் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரூபாய் 100 கோடி ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி உள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு தீய சக்தி என தமிழக வெற்றி கழகத்தின் ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணியாற்றினார்.

இவர் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்கியதில் ரூபாய் 100 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இதையடுத்து இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரத்திற்குள், அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் திமுக ஒரு தீய சக்தி மட்டுமல்ல, அது ஊழலின் ஊற்றுக்கண் என்று எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தெரிவித்துள்ளது.

தவெக ஐடி விங்

இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“நாங்கள்தான் ஆலமரம்... யார் ஆண்டாலும் நாங்கள்தான் ஆளும் கட்சி" என்று ஆணவத்தில் கொக்கரித்த திமுகவின் முகத்திரை இன்று கிழிகிறதா?

ஒருபுறம், பள்ளி மாணவர்களின் கல்வியுடன் தொடர்புடைய விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டில் நடிப்பு அரக்கன் கைது!

மறுபுறம், அரசு வேலைக்காகப் பல ஆண்டுகள் இரவு பகல் பாராமல் படிக்கும் இளைஞர்களின் கனவுகளைப் பணத்திற்காகச் சிதைத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மற்றொரு முன்னாள் அமைச்சரின் மறுஆய்வு மனு தள்ளுபடி.

மாணவர்களின் கல்வியையும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளையும் கூட ஊழலுக்கான வேட்டைக்காடாக மாற்றிவிட்டு, உத்தமர் வேடம் போடுவதற்கு கூசவில்லையா சீனியர் ஜெனரேஷனல் அபியூசர்? (Senior Generational abuser)

"கொள்கைதான் உயிர்" என்று மேடைகளில் முழங்கிவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதுதான் இந்தப் பண்ணையார் கட்சியின் வரலாறு.

ஆறே மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் என்று ஏறும் கல்யாண மேடைகளிலெல்லாம் மைக் பிடித்துப் புலம்பும் ஸ்வீட் அங்கிள் (Sweet Uncle).

இனி வரும் காலங்களில், திமுக ஒரு தீயசக்தி மட்டுமல்ல, ஊழலின் ஊற்றுக்கண் என்றும் மக்கள் பேசுவார்கள்! அதற்கும் சேர்த்து புலம்பித் தள்ளுங்கள்.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT