சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 3வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டக் கட்டமைப்பு, இந்தி மொழியைத் திணிப்பதற்கான ஒரு தெளிவான உந்துதலை வெளிப்படுத்துகிறது.
2027-28 முதல் கட்டாய மதிப்பீட்டுடன் கூடிய, படிப்படியான மும்மொழித் திட்டம், குழந்தைகள் மீது தேவையற்ற மற்றும் நியாயமற்ற சுமையைச் சுமத்துகிறது.
மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை, இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் மீதான ஒரு கொடூரமான தாக்குதலாகும்.
மத்திய அரசு இந்தியா முழுவதும் மற்றொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டுகிறதா?
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.