தற்போது விஜய் வழியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனது ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடிகர் தனுஷ் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ் ரசிகர்கள் சிலர் கூறியதாவது:-
முதலமைச்சர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தனித்து நின்று சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து உள்ளார். தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது ரசிகர் மன்றத்திற்கு வெள்ளை - சிகப்பு நிறத்தின் நடுவில் நட்சத்திரம் குறிக்கப்பட்டு, அதன் நடுவே தனது உருவப்படம் இருப்பது போன்று கொடியினை அறிமுகப்படுத்தினார்.
தற்போது விஜய் வழியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனது ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார்.
தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்டம் வாரியாக சென்று ரசிகர்களை சந்தித்து, தனது மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் மக்களை சந்திப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறார். எனவே 2031-ம் ஆண்டுக்குள் நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.