தனுஷ் அரசியலுக்கு வருவது மக்களுக்காகவா அல்லது வாக்குகளை பிரிக்கவா என்ற கேள்விக்கு மக்கள் மாலைமலருக்கு பதிலளித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜயை தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் அரசியலுக்குள் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக நடிகர் தனுஷ் மாற்றினார்.
மேலும் கடந்த அக்.25ம் தேதி, தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்தார்.
தொடர்ந்து தனது அரசியல் பிரவேசம் குறித்தும் தனுஷ் அறிவிப்பார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தனுஷ் அரசியல் வருகை குறித்து பொதுமக்களிடம் மாலைமலர் தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு மக்கள் பலவாறாக தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தனுஷ் அரசியலுக்கு வருவது மக்களுக்காகவா?, வாக்குகளை பிரிக்கவா? என கேட்கப்பட்டது. இதற்கு 12 பேர் தனுஷ் மக்களுக்காகவே அரசியலுக்கு வருகிறார் என மாலைமலரிடம் தெரிவித்தனர்.
39 பேர், அவர் வாக்குகளை பிரிக்கவே அரசியலுக்கு வருகிறார் என கூறினர். ஒருவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.