தமிழக செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் Strong-ஆ?- மக்கள் கூறுவது என்ன?

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆதரவு எப்படி உள்ளது என்பது குறித்து அந்த தொகுதி மக்களிடம் மாலைமலர் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

மாலை மலர்

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதியை சில தினங்களுக்கு முன்னர் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மார்ச் 15 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

ஆளும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

தமிழகத்தின் 13-வது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூர், 2011-ஆம் ஆண்டு முதல் திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் தொகுதியாக இருந்து வருகிறது. இந்த முறையும் அவர் இத்தொகுதியிலேயே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆதரவு எப்படி உள்ளது என்பது குறித்து அந்த தொகுதி மக்களிடம் மாலைமலர் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பலர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர். சிலர் எதிராகவும் பதில் அளித்தனர்.

அதில், ஆதரவாக பேசியவர்கள், அதன்படி ஸ்டாலின் ஆட்சியில் இலவச பஸ், ரேசன் கார்ட்டுக்கு மாதம் ரூ.1000, ஏசி பஸ் ஸ்டாண்ட் என பல நலத்திட்டங்கள் பயன் பெறும் வகையில் உள்ளதாக கூறினர். முன்னர் இருந்ததை விட தற்போது இந்த தொகுதிக்கு நிறைய நலடத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினர்.

எதிராக பேசியவர்கள் கூறியதாவது, 5 வருடங்களில் கடைசி ஒரு வருடத்தில் தான் நலத்திட்டங்களை செய்து வருகிறார். மக்களுக்கு தேவைகள் அதிக இருக்கும் போது ஏசி பஸ் ஸ்டாண்ட், பார்க் தேவையா என கேள்வி எழுப்பினர். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினர். அதிகமான மக்களுக்கு ரேஷன் கார்ட்டுக்கு ரூ.1000 வழங்கப்படவில்லை எனவும் கூறினர்.

கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும் எதிரான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.