தமிழக செய்திகள்

இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!

திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.

சமூகப்போராளியும் திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான திராவிட மணி இரட்டை மலை சீனிவாசன் நினைவு நாளான இன்நாளில் அவரது நினைவைப் போற்றி வணங்குகிறேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.

சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT