தமிழக செய்திகள்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணி செய்து வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்த உத்தரவில்,

* தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணி செய்து வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.

* சென்னை குற்றப்பிரிவு மத்திய மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சண்முகப்பிரியா சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

* ராமேஸ்வரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் மீரா சென்னை அலுவலக மற்றும் கணினி மயமாக்கல் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.