தமிழக செய்திகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் | IPL 2026

பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் விளாசினர். மிட்செல் ஸ்டார்க் 57 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

ஐ.பி.எல். 2026-ன் 55-வது லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 210 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 33 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். பிரப்சிம்ரன் சிங் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். கூப்பர் கொனோலி 27 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.

ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் ஸ்டோய்னிஸ் 1 ரன்னிலும், ஷஷாங்க் சிங் ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சூர்யான்ஷ் ஷெட்ஜ் 19-வது ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் விளாசினார். கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.