தமிழக செய்திகள்

வீரமணி வீட்டிற்கு சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்த இன்ஸ்டாமார்ட்

மதுரையை சேர்ந்தவரான வீரமணி, நகைச்சுவையாக பேசி இன்ஸ்டாவில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

மதுரையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வீரமணியின் வீட்டிற்கு சமீபத்தில் பல பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு கேஷ் ஆன் டெலிவரிக்காக சென்ற நிலையில், தற்போது அந்த வரிசையில் இன்ஸ்டாமார்ட் நிறுவனமும் இணைந்துள்ளது.

மதுரையை சேர்ந்தவரான வீரமணி, நகைச்சுவையாக பேசி இன்ஸ்டாவில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

இவரின் கணக்கை சுமார் இரண்டு லட்சம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தனக்கு ஸ்வீட் பாக்ஸ் அனுப்பி வைக்கமுடியுமா என கேட்டு, தனது வீட்டின் முகவரியையும் அதில் குறிப்பிட்டார்.

ரூபாய் 70 கோடி பொருட்கள்

இதையடுத்து நெட்டிசன்கள் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்து, வீரமணியின் வீட்டிற்கு கேஷ் ஆன் டெலிவரி கொடுத்தனர்.

இதனால் கடும் உன உளைச்சலுக்கு ஆளான வீரமணி, தான் தவறுதாக இணையத்தில் கூறிவிட்டதாகவும், தனது வீட்டிற்கு இனிமேல் பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டாம் எனவும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

இன்ஸ்டாமார்ட் நிறுவனம்

இந்த நிலையில் இன்ஸ்டாமார்ட் நிறுவனமும் அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது.

வீரமணியின் முகவரிக்கு ஒரு கைபேசி, ஒரு கணினி, ஒரு புரொஜெக்டர், ஒரு இண்டக்‌ஷன் குக்கர் என பல வீட்டு உபயோக பொருட்களை இன்ஸ்டாமார்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஆனால் இன்ஸ்டாமார் நிறுவனம் இந்த பொருட்களை கேஷ் ஆன் டெலிவரி செய்யாமல் இலவசமாக வீரமணிக்கு வழங்கியுள்ளது.

இலவசமாக அனுப்பி வைத்த நிறுவனம்

இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தின் ‘குயிக் இந்தியா மூவ்மெண்ட் சேல்’ விற்பனை நடைபெற்று வரும் சூழலில், இந்த டெலிவரி வீரமணியின் வீட்டிற்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாமார்ட் டெலிவரி ஊழியர்கள் தனது வீட்டிற்கு வந்த பொருட்களை இலவசமாக வழங்குவதை மகிழ்ச்சியுடன் இணையத்தில் வீரமணி பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த பொருட்களுக்கான தொகை இரண்டு லட்சம் ரூபாயை இன்ஸ்டாமார்ட் நிறுவனம் செலுத்திய ரசீதையும், வீரமணி பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT