தமிழக செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்: பெண் மீது சாணியை ஊற்றி தாக்குதல் நடத்திய வீடியோ வைரல்- சகோதரிகளுக்கு போலீசார் வலைவீச்சு

ஜெயஸ்ரீயை துடைப்பத்தாலும், சாணியை ஊற்றியும் நடுரோட்டில் அபிநயா, அருணாதேவி, பிரியா ஆகியோர் சரமாரியாக தாக்குகின்றனர்.

சகோதரிகளின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கவியரசன் என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

காரைக்குடி

இதற்கிடையே கவியரசனுக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கவியரசன் அபிநயாவை விட்டு விட்டு ஜெயஸ்ரீயுடன் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.​தன் கணவர் பிரிந்து செல்லக் காரணமான ஜெயஸ்ரீ மீது ஆத்திரமடைந்த அபிநயா மற்றும் அவரது சகோதரி அருணாதேவி, தோழி பிரியா ஆகியோர் ஜெய ஸ்ரீயை காரைக்குடி 100 அடி சாலையில் நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மூவரும் ஜெயஸ்ரீ மீது தாங்கள் ஏற்கனவே தயாராக கொண்டு வந்திருந்த சாணியைக் கரைத்து ஊற்றி, துடைப்பத்தால் சரமாரியாக தாக்கினர். இதனை சந்துரு என்பவர் வீடியோ எடுத்தார். பொதுமக்கள் பலரது முன்னிலையில் இளம்பெண்ணை அவமானப்படுத்தும் வகையில் சகோதரிகள் சாணி ஊற்றி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

வீடியோ

இந்த நிலையில் ஜெயஸ்ரீயை நடுரோட்டில் தாக்கியதை வீடியோவாக எடுத்ததை சகோதரிகள் தரப்பினர் இணையத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஜெயஸ்ரீயை துடைப்பத்தாலும், சாணியை ஊற்றியும் நடுரோட்டில் அபிநயா, அருணாதேவி, பிரியா ஆகியோர் சரமாரியாக தாக்குகின்றனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சகோதரிகளின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று உள்ளது.

விசாரணை

இதற்கிடையில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக கூறிவிட்டு சென்ற சகோதரிகள் அபிநயா, அருணாதேவி ஆகியோர் திடீரென தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காரைக்குடி வடக்கு காவல் துறையினர் சாணி ஊற்றி தாக்கிய சகோதரிகளின் தோழி பிரியா மற்றும் அதனை வீடியோ எடுத்த சந்துரு என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அபிநயா மற்றும் அவரது சகோதரி அருணா தேவியை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT