தமிழக செய்திகள்

சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

மழை காரணமாக விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.

பொதுமக்கள் பள்ளித்தென்னல் சாலையை மறித்து, அங்கு தேங்கி நின்ற மழைநீரில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பள்ளிதென்னல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

மழைநீர்

இந்த பகுதியில் விழுப்புரம்-புதுச்சேரி சாலை செல்கிறது. கடந்த சில நாட்களாக பள்ளிதென்னல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

நாற்று நடும் போராட்டம்

தண்ணீரை அகற்ற கோரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் திரண்டனர்.

பின்னர் பொதுமக்கள் பள்ளித்தென்னல் சாலையை மறித்து, அங்கு தேங்கி நின்ற மழைநீரில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், முன்வந்து நாங்கள் மழைநீரை அகற்றுவதாக கூறினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT