தமிழக செய்திகள்

பெரியார் அறிவுலக சர்ச்சை - பபாசி கண்டனம்

பதிப்புத் துறையில் நடைபெனும் ஒழுக்கநெறி மீறல்கள் மற்றும் முறைகேடான செயல்பாடுகளை பபாசி வன்மையாகக் கண்டிக்கிறது.

பதிப்புத் துறையில் நடைப்பெற்ற முறைகேடுகளுக்கு பபாசி கடும் கண்டனம்.நேர்மையான மற்றும் பொறுப்புணர்வுமிக்க பதிப்புத் துறைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பிரபக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை மூலம் முறைக்கேடானது வெளிச்சத்திற்கு வந்தது.

குறிப்பாக நூல்களில் போலியான ISBN எண்கள், தவறான வரலாற்றுத் தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் தரமற்ற உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.

ரூ.300 மதிப்புள்ள புத்தகங்கள் 'அகல்விளக்கு பதிப்பகம்' போன்ற சரிபார்க்கப்படாத பதிப்பகங்கள் மூலம் ரூ.1,500 வரை பல மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

, சமணத் துறவிகளின் பாடல்களின் தொகுப்பான 'நாலடியார்' பற்றிய நூலில் தவறான விளக்கங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், உள்விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குற்றம்சாட்டப்பட்ட முறைகேடுகளுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பபாசி தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

பதிப்புத் துறையில் 50 ஆண்டுகளாக நேர்மையையும் நம்பகத்தன்மையையும் நிலைநாட்டி வருகிறோம்.பதிப்புத் துறையில் நடைபெனும் ஒழுக்கநெறி மீறல்கள் மற்றும் முறைகேடான செயல்பாடுகளை பபாசி வன்மையாகக் கண்டிக்கிறது.

தற்போது சில பதிப்பகங்கள் மீது எழுத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளைச் சங்கம் மிகுந்த கவனத்துடனும் தீவிரத்துடனும் அணுகுகிறது.

தற்போது விசாரணைக்கு உட்பட்டுள்ள சம்பந்தப்பட்ட பதிப்பகங்களும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட நபர்களும் எந்தக் காலகட்டத்திலும் பபாசி சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்ததில்லை என்பதைச் சங்கம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறது.

1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பபாசி, பதிப்புத் துறையின் நம்பகத்தன்மையையும் நேர்மையையும் பாதுகாக்கும் வகையில், கடந்த 50 ஆண்டுகளாகக் கடுமையான உறுப்பினர் சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறது.

பபாசியின் உறுப்பினர் சேர்க்கை விதிமுறைகளின்படி, முழு உறுப்பினர் தகுதிக்குப் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இணை உறுப்பினராகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில், இணை உறுப்பினர்கள் பபாசி நடத்தும் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் சங்கத்தின் நிர்வாகம், கொள்கை முடிவுகள் மற்றும் பிற நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களுக்கு உரிமை வழங்கப்படுவதில்லை.நிரூபிக்கப்பட்ட முறைகேடுகளுக்கு எவ்வித சமரசமும் இல்லை.

பபாசி கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது.சங்க உறுப்பினர்கள் எவரேனும் கடுமையான முறைகேடுகள், சட்டவிரோதச் செயல்கள் அல்லது தீய நோக்கத்துடன் புத்தகங்களைப் பதிப்பித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது உரிய விசாரணை மற்றும் நடைமுறைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது சங்க விதிகளின்படி கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதில் சங்க உறுப்பினர் தகுதியை ரத்து செய்வதும், நாடு முழுவதும் பபாசி நடத்தும் அல்லது பபாசியுடன் இணைந்து நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்பதிலிருந்து விலக்குவதும்

எங்கள் உறுதிப்பாட்டில் என்றும் மாற்றமில்லை.கடந்த 50 ஆண்டுகளாகப் புத்தகங்களைப் பரவலாக்குதல், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், பதிப்புத் துறையின் நற்பெயரையும் நேர்மையையும் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டுதல் ஆகியவற்றில் பபாசி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது

பொறுப்புணர்வுமிக்க பதிப்புச் செயல்பாடுகள், உயரிய தொழில்முறை ஒழுக்கநெறிகள் மற்றும் செயல்களுக்கான பொறுப்பேற்றல் ஆகியவற்றில் பபாசி என்றும் உறுதியாக நிற்கும்.

என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT