தமிழக செய்திகள்

திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகல்

ஐயுஎம்எல் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பறெ இயலாது என ஐயுஎம்எல் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற ஐயுஎம்எல் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.

இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த உடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வதென ஐயுஎம்எல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.