தமிழக செய்திகள்

இந்திய நாடே ஸ்டாலின் பின்னால் இருக்கிறது..!- மல்லிகார்ஜூன கார்கே

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதுணையோடு தொகுதி மறுவரையறை மசோதாவை முறியடித்தோம்.

ஓசூரில் நடைபெற்று வரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது கார்கே பேசியதாவது:-

சமூகநீதி, சுயமரியாதை, அனைவருக்குமான வளர்ச்சிக்கு சொந்தமான மண்ணில் நின்று உரையாற்றுகிறேன்.

நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். இந்திய நாடே ஸ்டாலின் பின்னால் இருக்கிறது. நீங்கள் பின்பற்றும் திராவிட கொள்கையை ஆதரித்து நிற்கிறது.

சமூக நீதிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

பெரியார், அண்ணா, கலைஞர் இந்தியாவுக்கே கண்ணியம், பகுத்தறிவு ஆகியவற்றை கற்றுக் கொடுத்தவர்கள். அவர்களின் மண் இது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் 38 மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது.

38 மாதங்களாக மசோதாவை செயல்படுத்தாமல் எதிர்க்கட்சிகளின் மீது பொய்யான பழிபோடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதுணையோடு தொகுதி மறுவரையறை மசோதாவை முறியடித்தோம்.

மோடி வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.