ஆந்திர அரசால் சிறைபிடிக்கப்பட்ட 8 மீன்பிடி படகுகளை விடுவிக்க வலியுறுத்தி காசிமேடு மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மீனவர்கள் போராட்டத்தால் வெறிச்சோடிய காசிமேடு மீன் மார்கெட் .முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆந்திர காவல்துறையால் சிறைப் பிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி காசிமேடு மீனவர்கள் வேலைநிறுத்தை தொடங்கியுள்ளனர்.
சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடியுள்ளது.
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லடசம், ஒருவருக்கு அரசு பணி தர வேண்டும் என் மீனவர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மேலும் ஆந்திர காவல்துறையால் சிறைப் பிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி காசிமேடு மீனவர்கள் அரசிற்கு கோரிக்கையாக முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை மீட்க கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தையானது நடத்தப்பட்டுள்ளது.
மீன்பிடி படகுகளை மீட்க டிச.4ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.