தமிழக செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவ மழை காலம் தொடங்கியதையொட்டி கனமழை பெய்து வருகிறது.

ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாகி உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

குடிநீர் ஏரிகள்

சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு டி.எம்.சி. வரை தண்ணீர் பெறப்படுகிறது.

இந்த ஏரிகளுக்கு வடகிழக்கு பருவ மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர்தான் ஆதாரமாக உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்தநிலையில் வடகிழக்கு பருவ மழை காலம் தொடங்கியதையொட்டி கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாகி உள்ளது. இதனை நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT