தமிழக செய்திகள்

நெல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு கோரிக்கை - மத்திய அரசு குழு அமைப்பு

தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கோரி கோரிக்கை

வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளது. ஆதலால் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17%-ல் இருந்து 22% ஆக தளர்த்த வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு குழுக்கள் அமைத்துள்ளது. மத்திய உணவுத் துறையின் துணை இயக்குநர், உதவி இயக்குநர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் குழுக்கள் உடனே தமிழ்நாடு வந்து நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்வார்கள் எனவும் இந்த குழு பரிந்துரையின் அடிப்படையில் ஈரப்பதத்தில் தளர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.