தமிழக செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அணை நீர் மட்டம் 55.95 அடியாகவும், நீர் இருப்பு 21.76 டி.எம்.சி.ஆகவும் இருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைகிறது.

அதன்படி நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,048 கன அடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 3,190 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி அளவில் அணை நீர் மட்டம் 55.95 அடியாகவும், நீர் இருப்பு 21.76 டி.எம்.சி.ஆகவும் இருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT