பால் விலை உயர்வு தொடர்பாக வெளியான செய்தி தவறானது என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான நிலையில் பால் விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
* பால் விலை உயர்வு தொடர்பாக வெளியான செய்தி தவறானது.
* பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம்.
* உற்பத்தியாளர்களின் நலன், நுகர்வோரின் நலனை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.