தமிழக செய்திகள்

பழவேற்காட்டில் மீன் விலை அதிகரிப்பு

பழவேற்காட்டில் விற்பனைக்கு வரும் மீன் வரத்து குறைவாக காணப்படுவதால் மீன் விலைகள் அதிகமாக காணப்படுகின்றன.

இறால்களுக்கு கடும் கிராக்கி உள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பிற மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

பழவேற்காடு ஏரி உவர்ப்பு நீர் ஏரியாக உள்ளது. இதனால் இங்கு உள்ள மீன், நண்டுகளுக்கு தனி சுவை உண்டு. பழவேற்காடு கடலும், ஏரியும் சந்திக்கும் இடமான முகத் துவாரம் வழியாக மீன வர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

பழவேற்காடு

பெரும்பாலும் இங்கு பிடிக்கப்பட்ட மீன்கள் ஐஸ் போட்டு பதப்படுத்தாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் பழவேற்காட்டில் பிடிக்கப்படும் கட்டு நண்டிற்கும் தனி மவுசு உள்ளது. இந்த வகை நண்டுகள் 1 கிலோ மேல் இருந்தால் கிலோ ரூ.1500-க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்குள்ள இறால்களுக்கு கடும் கிராக்கி உள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பிற மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழவேற்காட்டில் விற்பனைக்கு வரும் மீன் வரத்து குறைவாக காணப்படுவதால் மீன் விலைகள் அதிகமாக காணப்படுகின்றன.

மீன்கள்

வஞ்சிரம் கிலோ ரூ.1300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாலைமீன்-ரூ.300, கானங்கெளுத்தி-ரூ.200, மடவை-ரூ.300, இறால்-ரூ.200 முதல்-ரூ.600 வரை, பாறை மீன்-ரூ.650, கொடுவா-ரூ.600, வவ்வால் மீன்-ரூ.600, சிறியவவை மீன்கள் கிலோ-ரூ.200, வாலை மீன்-ரூ. 250, கடல் நண்டு கிலோ ரூ. 200 முதல் ரூ.500 வரை, விற்பனை செய்யப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமானோர் பழவேற்காடு மார்க்கெட்டிற்கு வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். இதனால் மீன்வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT