தமிழக செய்திகள்

வேளாண் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீடு உயர்வு- அரசாணை வெளியீடு

இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிப்பு.இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு.

மாலை மலர்

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரணத்துக்கான இழப்பீட்டை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து, மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.