2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இணைந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எந்தத் தொகுதியில் போட்டி என்பதற்கான விருப்பப் பட்டியலை கொடுத்திருப்பதாகவும், நாளை அழைப்பதாக திமுக தரப்பில் தெரிவித்துள்ளதாகவும், தற்போது மனநிறைவாக இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, மு. தமிமுன் அன்சாரி நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்றார். சமீப ஆண்டுகளாக திமுக கூட்டணியை ஆதரித்து வருகிறார்.
அதுபோல நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளுமே திமுகவின் சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.