தமிழக செய்திகள்

RMC Chennai| தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென் இந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்ப நிலை 98 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.